ADDED : ஆக 16, 2024 12:11 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுப்பையா சுவாமி மடத்தில் குருக்ருபா சேவா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கும், சீதாதேவிக்கும் மஹோத்ஸவ நிகழ்ச்சி நடந்தது.
முன்னதாக கணபதி ஹோமம், குரு கீர்த்தனை, தியானம், ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம் கூட்டுப் பிரார்த்தனை, கும்பகோணம் ஹரிணி பாகவதர் - சென்னை ஜெயராம பாகவதர் ஆகியோர் இணைந்து சம்பிரதாய பஜன் அஷ்டபதி, திவ்ய நாம சங்கீர்த்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. ஸ்ரீ சீதாராம விவாஹ மஹோத்ஸவத்தை கும்பகோணம் ஸ்ரீ வெங்கடேஷ் பாகவதர் மற்றும் குழுவினர் நடத்தினர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.