/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
/
ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவில் பூச்சாட்டு விழா
ADDED : மார் 29, 2024 12:52 AM

அவிநாசி;அவிநாசி, கங்கவர் வீதியிலுள்ள ஸ்ரீ செல்லாண்டியம்மன் கோவிலில், 66ம் ஆண்டு பூச்சாட்டு விழா நடைபெற்றது.
கடந்த, 19ம் தேதி கணபதி ஹோமம், காப்பு கட்டுதல் மற்றும் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து கரகம் எடுத்து சக்தி அழைத்து வரும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து 20ம் தேதி முதல் 26ம் தேதி வரை தினமும் அம்மனுக்கு அபிஷேக ஆராதனை, சக்தி அளித்தல், படைக்கலம் எடுத்தல், அம்மன் திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பூச்சாட்டு விழாவில் நேற்று மாவிளக்கு ஊர்வலம், அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலாவும், பொங்கல் வைத்தல் ஆகியவை நடைபெற்றது.
இன்று மஞ்சள் நீராட்டு, சிறப்பு அபிஷேகம், அம்மன் ஊஞ்சல் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது. 66ம் ஆண்டு பூச்சாட்டு விழாவை முன்னிட்டு விழா குழுவினர் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

