ADDED : ஏப் 18, 2024 04:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி : திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு கோவில்களில் ஸ்ரீராமநவமி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
அவிநாசி ஒன்றியம், சேவூரிலுள்ள ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவிலில், 38ம் ஆண்டு ஸ்ரீ ராமநவமி விழா நேற்று காலை சகஸ்ர நாம பாராயணத்துடன் துவங்கியது. தொடர்ந்து அபிஷேக ஆராதனை மஹா தீபாராதனை நடைபெற்றது. விழா நிறைவாக, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

