/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
/
ஸ்ரீ வலம்புரி விநாயகர் கோவில் கும்பாபிேஷகம்
ADDED : ஜூலை 03, 2024 09:32 PM

உடுமலை : உடுமலை குருவப்பநாயக்கனுார் வலம்புரி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
உடுமலை அருகே, குருவப்பநாயக்கனுார் வலம்புரி விநாயகர் கோவிலில், கும்பாபிேஷக விழா மூன்று நாட்களாக நடந்தது.
முதல் நாளில் விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து நவகிரக ேஹாமம் மாலையில் புன்யாகவாசணம், மண்டப ஆராதனை, கும்ப அலங்காரம், முதற்கால யாக பூஜை நடந்தது.
மறுநாள் காலையில் இரண்டாம் கால யாக பூஜை, உபச்சார வழிபாடு விமான கலசம் வைத்தல், மூன்றாம் கால யாக பூஜையும், மாலையில் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்வும் நடந்தது.
நேற்று அதிகாலையில் விக்னேஷ்வர பூஜை, பூர்வாங்க வழிபாடு, நாடிசந்தானம், நான்காம் கால யாக பூஜை நடந்தது. தொடர்ந்து காலை, 6:00 மணிக்கு ஸ்ரீ வலம்புரி விநாயகர் விமான கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.
பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து கோ தரிசனம், சுவாமிக்கு அபிேஷகம், சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல் 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.