/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்ரீகுரு ராகவேந்திரா சுவாமி மகோத்சவம் கோலாகலம்
/
ஸ்ரீகுரு ராகவேந்திரா சுவாமி மகோத்சவம் கோலாகலம்
ADDED : ஆக 23, 2024 02:28 AM

திருப்பூர்;திருப்பூர், பார்க் ரோடு, ஸ்ரீ குரு ராகவேந்திரா சேவா சங்கம் சார்பில், ஸ்ரீ குரு ராகவேந்திரா சுவாமி களின், 353வது ஆராதனை மகோத்சவம் நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாள் மத்ய ஆராதனை, கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், ஸ்ரீராகவேந்திரா அஷ்டாக் ஷரா வாக் ேஹாமம் உட்பட பல்வேறு ேஹாம பூஜைகளுடன் துவங்கியது. மகா அபிேஷகம், கனகாபிேஷகம், பல்லக்கு சேவை, மகா தீபாராதனை ஆகியன நடந்தன.
இரண்டாம் நாளான நேற்று காலை சிறப்பு அபிேஷகம், கனகாபிேஷகம், பாத பூஜை, மகா தீபாராதனை ஆகியன நடைபெற்றது. இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று (23ம் தேதி), காலை மகா அபிேஷகமும் அதை தொடர்ந்து, ஸ்ரீராகவேந்திரா ஸ்தோத்ர பாராயண நிகழ்வு நடைபெறுகிறது. மதியம், 12:00 மணிக்கு மகா தீபாராதனை நடைபெறுகிறது.