ADDED : மார் 30, 2024 12:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்;திருப்பூர், காங்கயம் ரோடு, பூலாவாரி சுகுமாரன் நகர், ஸ்ரீ கருமாரியம்மன் கோவில், பொங்கல் விழா, 20ம் தேதி கிராமசாந்தி பூஜையுடன் துவங்கியது.
கடந்த, 24ம் தேதி விநாயகர் பொங்கலை தொடர்ந்து, கம்பம் நடப்பட்டது. தினமும் சிறப்பு பூஜை நடந்தது. விழா நாட்களில் சமயபுரம் மாரியம்மன், ஸ்ரீ காமாட்சியம்மன் அலங்காரங்களில் சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவிலில் இருந்து தீர்த்தம், பூவோடு, மாவிளக்கு ஊர்வலம் கோவில் வந்தடைந்து சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. தீரன் கலைக்குழு நடன நிகழ்ச்சி, மஞ்சள் நீராட்டு விழா, குழந்தைகள் நடன நிகழ்ச்சிகள் நடந்தது. இன்று அன்னதானத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

