/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'தொழிலாளருக்கு வீட்டு வசதி தாமதமானால் போராட்டம்'
/
'தொழிலாளருக்கு வீட்டு வசதி தாமதமானால் போராட்டம்'
ADDED : ஜூன் 24, 2024 02:13 AM

திருப்பூர்;ஏ.ஐ.டி.யு.சி., பனியன் தொழிற்சங்க பொதுக்குழு கூட்டம், திருப்பூர் அலுவலகத்தில் நடந்தது. துணை தலைவர் ரவி தலைமை வகித்தார். சங்க செயல்பாடுகள் குறித்து செயலாளர் சேகர், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் பேசினர்.
திறப்பு விழா நடந்தும், இ.எஸ்.ஐ., மருத்துவமனை தொழிலாளர் பயன்பாட்டுக்கு வரவில்லை; விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும்.
திருப்பூர் தொழிற்சாலைகளில், தொழிலாளர் நலச்சட்டங்கள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும். தொழிலாளர் வாங்கும் சம்பளத்தில், பெரும் தொகை வீட்டு வாடகையாக செல்கிறது. இந்நிலையை மாற்ற, தொழிலாளருக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். வீடு கட்ட, மாநில அரசு சிறப்பு நிதி ஒதுக்க வேண்டும்.
வீடு கட்டும் திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டதால், தொழிலாளர்களை திரட்டி, கலெக்டர் அலுவலகம் முன், தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.