/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறு, குறு விவசாயிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்
/
சிறு, குறு விவசாயிகளுடன் மாணவர்கள் கலந்துரையாடல்
ADDED : மே 16, 2024 11:42 PM

உடுமலை:தேனி வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி நான்காம் ஆண்டு மாணவர்கள், கிராம தங்கல் திட்டத்தின் கீழ் உடுமலை வட்டாரத்தில் தங்கி பயிற்சி பெற்று வருகின்றனர்.
இம்மாணவர்கள் சார்பில், சிறு, குறு விவசாயிகளுக்கான கலந்துரையாடல் நிகழ்ச்சி உடுமலை அந்தியூரில் நடந்தது.
இதில், கொண்டைக்கடலை, கொத்தமல்லி மற்றும் சோளம் சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேட்டறிந்து, அதற்கான தீர்வுகள் மற்றும் வழிகாட்டுதல் வழங்கினர்.
மேலும், 'இ-நாம்' திட்டத்தின் கீழ், வேளாண் விளைபொருட்களை சந்தைப்படுத்தும் முறை மற்றும் அரசின் உழவன் மொபைல் செயலி பயன்படுத்துவது குறித்தும் விளக்கமளித்தனர்.நீர் சிக்கனத்துக்காக பண்ணைக்குட்டை அமைக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்திட்டங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. கலந்துரையாடல் நிகழ்ச்சியில், அந்தியூர் சுற்றுப்பகுதி விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.

