/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமத்தில் துாய்மைப்பணி மேற்கொண்ட மாணவியர்
/
கிராமத்தில் துாய்மைப்பணி மேற்கொண்ட மாணவியர்
ADDED : பிப் 24, 2025 11:58 PM
பல்லடம்; திருப்பூர் குமரன் மகளிர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., மாணவியரின் நாட்டு நலப்பணித்திட்ட முகாம், பிப்., 18 அன்று பல்லடம் அடுத்த கேத்தனுார் கிராமத்தில் துவங்கியது.
பேராசிரியர்கள் கோமதி, நிர்மலா தேவி, கோமளவல்லி மற்றும் ரூபா ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்தனர்.
முன்னதாக, முதல் நாள் துவக்க விழா நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. மறுநாள்,கிராமங்களில், முக்கிய சாலைகள், கோவில் மற்றும் பள்ளி வளாகங்களில் துாய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
நெகிழி கழிவுகள் அகற்றப்பட்டு, போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் புகையிலை எதிர்ப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இயற்கை விவசாயி பழனிசாமியின் தோட்டத்தில் மாணவியர் ஆய்வு மேற்கொண்டனர். ஏழு நாட்கள் நடந்த முகாம் நேற்று நிறைவடைந்தது.
அரசு பள்ளியில் நடந்த நிறைவு நாள் நிகழ்ச்சியில், கல்லுாரி தலைவர் அர்த்தநாரீஸ்வரன் தலைமை வகித்தார். முன்னாள் ஊராட்சி தலைவர் சித்ரா ஹரி கோபால், நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

