/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போதையால் மாறுது மாணவர் பாதை... ஆசிரியர்கள் வேதனை
/
போதையால் மாறுது மாணவர் பாதை... ஆசிரியர்கள் வேதனை
ADDED : மே 06, 2024 11:30 PM
திருப்பூர்;பள்ளி மாணவர்கள் மத்தியில் கஞ்சா பழக்கம் அதிகரித்து வருவதாக, ஆசிரியர்களே ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து, கல்வித்துறையினர் சிலர் கூறியதாவது: அரசுப்பள்ளி மாணவர்களிடம், கஞ்சா பயன்படுத்தும் பழக்கத்தை சில சமூக விரோதிகள் புகுத்தி வருகின்றனர். ஆரம்பத்தில், 200, 300 ரூபாய்க்கு ஒரு சிறிய பொட்டலத்தில் அடைக்கப்பட்ட கஞ்சா விற்கப்பட்ட நிலையில், அந்தளவு பணம் கொடுத்து கஞ்சா வாங்க மாணவர்கள் தயங்கினர்; அந்தளவு பணம், அவர்களது கையில் புழங்காததே காரணம்.
தற்போது 10, 20 ரூபாய்க்கு கூட மிகச்சிறிய அளவில் கஞ்சா விற்கப்படுகிறது; பல மாணவர்கள் தாரளமாக வாங்கி பயன்படுத்துகின்றனர். பள்ளிகள் அருகேயுள்ள பெட்டிக் கடைகளில், கஞ்சா விற்கப்படுகிறது; அத்தகைய போதைப் பொருட்களை பயன்படுத்தும் மாணவ, மாணவியரின் செயல்பாடுகளை பார்த்தே, நாங்கள் கண்டு பிடித்து விடுகிறோம்.
எனவே, மாவட்டத்தில் கஞ்சா புழக்கத்தை, போலீசார் கட்டுப்படுத்த வேண்டும். போதைப் பொருட்களை உட்கொள்ளும் மாணவர்கள், இறுக்கமான முகத்துடன், சிரித்த நிலையிலேயே இருப்பர். அவர்கள் வாயில் இருந்து அழுகிய ஆப்பிள் பழத்தின் வாசம் போன்றதொரு வாசம் வரும்; இத்தனை சவால்களையும் எதிர்கொண்டு, மாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தி, தேர்ச்சி பெற செய்வது, ஆசிரியர்களுக்கு பெரும் போராட்டமாகவே உள்ளது.
ஆசிரியர்கள், மாணவர்களை கண்காணிப்பது போன்று, பெற்றோரும், தங்கள் பிள்ளைகளின் செயல்பாடுகளை கண் காணிக்க வேண்டும்; அவர்கள் போதை பழக்கத்துக்கு அடிமையாவதை கண்டறிந்தால், அதில் இருந்து அவர்களை விடுவிப்பதற்கான முயற்சி எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள்கூறினர்.
போதைப் பொருட்களை உட்கொள்ளும் மாணவர்கள், இறுக்கமான முகத்துடன், சிரித்த நிலையிலேயே இருப்பர். அவர்கள் வாயில் இருந்து அழுகிய ஆப்பிள் பழத்தின் வாசம் போன்றதொரு வாசம் வரும்