ADDED : ஜூலை 12, 2024 12:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித் திட்ட அலகு - -2 சார்பில், உலக மக்கள்தொகை தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் மக்கள் தொகை தினத்தின் அவசியம் குறித்து மாணவர்களிடம் பேசினார். மாணவச் செயலர் மது கார்த்திக், கிருஷ்ணமூர்த்தி, திவாகர், ரேவதி, ஆகியோர் தலைமையில் கல்லுாரி மாணவ, மாணவியர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

