/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஸ்டைலான சம்மர் ஷாப்பிங் 'ரோலி பாலி' ஷாப்பிங் மேளா
/
ஸ்டைலான சம்மர் ஷாப்பிங் 'ரோலி பாலி' ஷாப்பிங் மேளா
ADDED : ஏப் 28, 2024 01:34 AM

திருப்பூர்:திருப்பூர், காங்கயம் ரோடு வேலன் ஓட்டல் மான்செஸ்டர் ஹாலில் நடக்கும், 'ரோலி பாலி' ஷாப்பிங் மேளா இன்று நிறைவு பெறுகிறது.
'ரோலி பாலி - பாப் அப்' -மூலம், திருப்பூர் தொழில்முனைவோர், பெண்களுக்கான உடைகள், புடவைகள், சல்வார்கள், வீட்டு அலங்காரப் பொருட்கள், ஐஸ்கிரீம்கள், இனிப்பு வகைகள் மற்றும் பலவற்றின் விரிவான சேகரிப்புக்காக உள்நாட்டு பிராண்ட்கள், கண்காட்சி நடக்கிறது.
மேலும், மட்டன் பிரியாணி, பர்கர்கள் முதல் பெல்ஜியன் வாபிள்ஸ் மற்றும் சைவ ஐஸ்கிரீம்கள் வரையிலான அருமையான உணவுப் பொருட்கள் உள்ளன.
குழந்தைகளுக்கான லக்கி டிப், நடனம் மற்றும் விளையாட்டுகளுடன் கூடிய 'ரோலி பாலி' கண்காட்சியை, கிட்ஸ் கிளப் பள்ளி தலைவர் மோகன் கார்த்திக் மற்றும் பி.கே.எஸ்., இண்டஸ்ட்ரி இயக்குனர் சங்கீதா வேல்கிருஷ்ணா ஆகியோர் துவக்கி வைத்தனர். கண்காட்சி நிர்வாகிகள் கூறுகையில், '''திருப்பூர் பேரன்டிங் நெட்வொர்க்' சார்பில், 'ரோலி பாலி' பாப் - அப் கண்காட்சி நடக்கிறது.
திருப்பூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள அனைத்து பெண் தொழில்முனைவோருக்கும் ஒரு தளத்தைக் கொண்டுவரும் நோக்கத்தில் இது தொடங்கப்பட்டுள்ளது.
தேசிய அளவில் திருப்பூரில் இருந்து பல பிராண்ட்கள் வளர்ந்து வருவதை நாம் பார்த்திருக்கிறோம். அதற்கு இந்த தளம் முக்கியமானது.
ஆண்டுக்கு இரண்டு முறை கண்காட்சி நடத்துகிறோம். இன்று, இரவு, 9:00 மணி வரை கண்காட்சி நடைபெறும்'' என்றனர்.

