/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருத்தி சாகுபடிக்கு மானியம் தேவை
/
பருத்தி சாகுபடிக்கு மானியம் தேவை
ADDED : ஆக 04, 2024 10:23 PM
உடுமலை: உடுமலை பகுதியில், பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க, வேளாண்துறை வாயிலாக சிறப்பு மானிய திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
உடுமலை, குடிமங்கலம் வட்டாரங்களில், முன்பு, பருத்தி பிரதான சாகுபடியாக இருந்தது. பல்வேறு காரணங்களால், இச்சாகுபடியை விவசாயிகள் கைவிட்டனர்.
கடந்த, 2009ல் இருந்து, மீண்டும் மிக நீண்ட இழை மற்றும் நீண்ட இழை பருத்தி ரகங்களை பயிரிட விவசாயிகள் ஆர்வம் காட்டினர்; சில சீசன்களில், நல்ல விலையும் கிடைத்தது.
கடந்த, 2020 -21ம் ஆண்டில், மானாவாரி மற்றும் இறவை பாசனத்தில், திருப்பூர் மாவட்டம் முழுவதும், 931 ெஹக்டேரில் பருத்தி சாகுபடி செய்யப்பட்டு, 3,329 டன் பருத்தி உற்பத்தி செய்யப்பட்டது.
நுாற்பாலைகளுக்கு தேவையான பருத்தி உற்பத்தியாகாத நிலையில், விவசாயிகளை அரசு ஊக்குவித்தால், இடைவெளியை குறைக்க வாய்ப்புள்ளது. எனவே, நடப்பு சீசனில், பருத்தி சாகுபடி பரப்பை அதிகரிக்க, வேளாண்துறை வாயிலாக அரசு சிறப்பு திட்டங்களை செயல் படுத்த வேண்டும்.
குறிப்பாக, பகுதிவாரியாக விவசாயிகள் தேர்வு செய்யும் விதை ரகங்களை மானியத்தில், வழங்கினால், சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இது குறித்து உடனடி நட வடிக்கை எடுக்க எதிர்பார்ப்பு நிலவுகிறது.