/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேவதி கல்வி நிறுவனங்கள் நடத்திய 'வெற்றி நிச்சயம்'
/
ரேவதி கல்வி நிறுவனங்கள் நடத்திய 'வெற்றி நிச்சயம்'
ADDED : ஏப் 28, 2024 01:30 AM

அவிநாசி;அவிநாசி அருகே  செயல்படும் ரேவதி அறக்கட்டளை மற்றும் கல்வி நிறுவனங்கள் சார்பில், 'வெற்றி நிச்சயம் - 2024' நிகழ்ச்சி ரேவதி நர்சிங் கல்லுாரி அரங்கில் நடந்தது.
'பிளஸ் 2 வகுப்புக்கு பின், என்ன, எங்கு, எப்படி படிக்கலாம்' என்பது குறித்தான,  முப்பெரும் மருத்துவ கல்வி வழிகாட்டி நிகழ்ச்சிக்கு ரேவதி நிறுவனத் தலைமை நிர்வாக அலுவலர் நாகரத்தினம் வரவேற்றார். நோக்கம் குறித்து கூடுதல் நிர்வாக இயக்குனர் விஷ்ணுராகவ் பேசினார்.
திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா கல்வி மேம்பாடு குறித்து சிறப்புரையாற்றினார். ரேவதி அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி பங்கேற்றார். மருத்துவ கல்வி குறித்த கண்காட்சியை கல்வியாளர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் காந்தி திறந்து வைத்து பேசினார்.
கல்லுாரி நிர்வாக அலுவலர் சிவானந்த வல்லபன் நன்றி கூறினார். ரேவதி நர்சிங் கல்லுாரி மற்றும் கல்வி நிறுவனங்களில் பிளஸ் 2வில், முதல் மூன்று மதிப்பெண் எடுப்பவர்களுக்கு, 25 சதவீத கல்வி கட்டண சலுகையும், 60 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் எடுப்பவர்களுக்கு, 10 சதவீத கல்வி கட்டண சலுகையும் வழங்குகின்றனர்.

