/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் குறைகேட்பு நடைமுறை திடீர் மாற்றம்
/
விவசாயிகள் குறைகேட்பு நடைமுறை திடீர் மாற்றம்
ADDED : ஆக 18, 2024 11:42 PM
திருப்பூர்;திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, அவிநாசி, பல்லடம், ஊத்துக்குளி ஆகிய ஐந்து தாலுகாக்களை உள்ளடக்கிய திருப்பூர் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், ஒவ்வொரு மாதமும் மூன்றாவது வாரத்தில் நடத்தப்பட்டுவருகிறது. வழக்கமாக, திருப்பூர் குமரன் ரோட்டிலுள்ள சப்கலெக்டர் அலுவலகத்தில், விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும்.
இம்மாதம் முதல், கோட்ட அளவிலான குறைகேட்பு கூட்டத்தை, ஒவ்வொரு தாலுகா அலுவலகத்திலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில், இம்மாதத்துக்கான கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்பு கூட்டம், செவந்தாம் பாளையத்தில் உள்ள, திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலக கூட்ட அரங்கில், வரும் 21 ம் தேதி நடைபெற உள்ளது. காலை, 10:30 மணிக்கு நடைபெறும் முகாமில், சப்கலெக்டர் சவுமியா, விவசாயிகளின் குறைகளை கேட்டறிகிறார்.

