ADDED : ஜூன் 10, 2024 02:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பல்லடம்;பல்லடம் பஸ் ஸ்டாண்ட் எதிரே, நகராட்சிக்கு உட்பட்ட மயானம் உள்ளது.
நேற்று மதியம், பூட்டிக் கிடந்த மயானத்தின் உட்புறத்தில் இருந்து திடீரென வெண்புகை வெளியேறியது. மயானம் பூட்டி கிடக்கும் நிலையில், எப்படி உள்ளிருந்து புகை வெளியேறும் என்று சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக, பல்லடம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதற்குள், மயானத்தில் இருந்த காய்ந்த புற்கள், செடி கொடிகள் மீது தீ பரவியது.
தீயணைப்பு படை வீரர்கள், மயான சுற்றுச்சுவரின் மீது ஏறி, தண்ணீரை பீய்ச்சி அடித்து, தீயை அணைத்தனர். அருகில் டிரான்ஸ்பார்மர் உள்ள நிலையில், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மயானத்துக்குள் யாரேனும் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா அல்லது மின் கசிவா என்று விசாரணை நடக்கிறது.