/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கல்வி அலுவலர்கள் திடீர் இட மாற்றம்
/
கல்வி அலுவலர்கள் திடீர் இட மாற்றம்
ADDED : ஆக 22, 2024 12:35 AM
திருப்பூர் : பள்ளி கல்வி இயக்குனர் கண்ணப்பன், மாநிலம் முழுதும், 57 மாவட்ட கல்வி அலுவலரை பணியிடம் மாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்தார். திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக (இடைநிலை) பணியாற்றிய வந்த, பக்தவத்சலம், கரூர் மாவட்ட கல்வி அலுவலராகவும் (இடைநிலை), நீலகிரி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக இருந்த கோமதி, திருப்பூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலராக (தொடக்கக் கல்வி) இருந்த தேவராஜன், திருப்பூர் மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். பெருந்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி, திருப்பூர் மாவட்ட கல்வி அலுவலர் (தனியார் பள்ளிகள்) பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார்; இப்பணியிடத்தில் இருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலராக (தொடக்க கல்வி) இருந்த ஜெகதீசன், திருவண்ணாமலை மாவட்ட கல்வி அலுவலராக (தனியார் பள்ளிகள்) மாற்றப்பட்டுள்ளார். இப்பணியிட மாற்றங்கள் மூலம் திருப்பூர் மாவட்ட மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை), தாராபுரம் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) பணியிடங்கள் காலியாக உள்ளது.
ஏற்கனவே, கவுன்சிலிங் முடிந்து விட்டதால், பதவி உயர்வு அடிப்படையில் இப்பணியிடங்கள் விரைவில் நிரப்பபட்டு விடும் என மாவட்ட கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.