/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சர்க்கரை ஆலை நவீனப்படுத்த கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
/
சர்க்கரை ஆலை நவீனப்படுத்த கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சர்க்கரை ஆலை நவீனப்படுத்த கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சர்க்கரை ஆலை நவீனப்படுத்த கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 12, 2024 12:58 AM

உடுமலை:திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே மடத்துக்குளம், கிருஷ்ணாபுரத்தில், அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை நவீனமாக்க வலியுறுத்தி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன், கையில் கரும்புகளை ஏந்தியவாறு நேற்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சங்க தலைவர் பாலதண்டபாணி தலைமை வகித்தார்.
கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்த மனு:
கடந்த 1961ல் துவங்கப்பட்ட இந்த ஆலை, அடிக்கடி பழுது ஏற்பட்டு, பிழிதிறன் குறைந்துள்ளது. கடந்த 2022 - 23ம் ஆண்டு, நாளொன்றுக்கு, 1,250 டன்னுக்கு பதில், சராசரியாக, 650 டன் வீதம், 42,546 டன் மட்டுமே கரும்பு அரவை நடைபெற்றது. இதனால், விவசாயிகள், தொழிலாளர், வாகன உரிமையாளர் அனைவரும் பாதிக்கப்படுகின்றனர். இந்தாண்டு ஆலை முழுமையாக இயங்கவில்லை. இதனால், கரும்பை தனியார் ஆலைகளுக்கு அனுப்பும் நிலை ஏற்படுகிறது. ஆலையை, நவீனப்படுத்த, 80 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.

