/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சன்ைஷன் லக்ஷூரி வில்லா இன்று கோலாகல துவக்க விழா
/
சன்ைஷன் லக்ஷூரி வில்லா இன்று கோலாகல துவக்க விழா
ADDED : மே 03, 2024 11:37 PM
திருப்பூர்;திருப்பூர் அருகே, 'சன்ைஷன் லக்ஷூரி வில்லாஸ்' என்ற பெயரில், கேட்டட் கம்யூனிட்டிக்கான புதிய லே அவுட் விற்பனை துவக்கப்படுகிறது.இது குறித்து அதன் நிர்வாகத்தினர் கூறியதாவது:
திருப்பூர் அருகே வஞ்சி பாளையம் - அவிநாசி செல்லும் ரோட்டில், சின்ன கருணைபாளையத்தில் உள்ள ரிச் அவென்யூ அருகே, 'சன் ைஷன் லக்ஷூரி வில்லாஸ்' என்ற பெயரில், புதிய கேட்டட் கம்யூனிட்டி லே அவுட் விற்பனை துவக்கப் படுகிறது.
இதன் துவக்க விழா, 4ம் தேதி (இன்று) மாலை, 4:30 மணிக்கு நடக்கிறது. திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க நிறுவன தலைவர் சக்திவேல், திறந்து வைக்கிறார். மணி அப்பேரல்ஸ் மற்றும் டாலர் டெக்ஸ்டைல் பிராசசிங் மில்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர் பாலசுப்ரமணியன், வில்லா வளாகத்தில் உள்ள 'கிளப் ஹவுஸ்' ஐ திறந்து வைக்கிறார்.
திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் சுப்பிரமணியன், பொது செயலாளர் திருக்குமரன், செயற்குழு உறுப்பினர் பிரேம் அகர்வால் மற்றும் தீபம் செந்தில்குமார், யுனைடெட் மனோகர் உட்பட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.
வில்லா பற்றிய விபரங்களுக்கு, 94421 02929, 87549 05896 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.