/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சுத்திகரிப்பு கருவி பள்ளிக்கு வழங்கல்
/
சுத்திகரிப்பு கருவி பள்ளிக்கு வழங்கல்
ADDED : பிப் 21, 2025 11:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; தமிழக அரசின், நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் கணக்கம்பாளையம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு, ஐடிபிஜ வங்கியின் சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்ச்சியில், பள்ளி தலைமையாசிரியர் ராமகிருஷ்ணன் வரவேற்றார். வங்கி உடுமலை கிளை நிர்வாகத்தினர் சுத்திகரிப்பு கருவி வழங்கியது குறித்து பேசினர்.
பள்ளி ஆசிரியர் காயத்ரி இக்கருவியின் பயன்பாடு குறித்து பேசினார். விழாவில் பள்ளி மேலாண்மைக்குழுவினர், பெற்றோர் பங்கேற்றனர்.

