ADDED : ஜூலை 06, 2024 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:மாநகராட்சி பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது.பள்ளிக் கல்வித்துறை சார்பில், புதிய வகுப்பறை கட்டுதல் மற்றும் விளையாட்டு திடல் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தில் திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. மேயர் தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார், கல்விக்குழு தலைவர் திவாகரன் உள்ளிட்டோர் இப்பணிகளை நேரில் சென்று பார்வையிட்டனர்.
l குடிநீர் திட்ட பணி: ராயபுரம் பகுதியில் புதிதாக கட்டியுள்ள மேல்நிலைத் தொட்டி, பம்பிங் மையம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தார். குடிநீர் வினியோகம் குறித்து அவர் கேட்டறிந்தார்.