ADDED : ஜூலை 17, 2024 11:57 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் மாநகராட்சி சார்பில், தாராபுரம் ரோடு, கோவில்வழியில் புதிய பஸ் ஸ்டாண்ட் கட்டுமானம் நடைபெற்று வருகிறது. கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதனை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாநகர பொறியாளர் திருமாவளவன், துணை பொறியாளர் செல்வநாயகம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். மாநகராட்சி, 3வது மண்டலம், 58வது வார்டு, சபரிநகர் பகுதியில் குடிநீர் திட்டப் பணிகள் நடக்கிறது.
இப்பகுதியில், நான்காவது குடிநீர் திட்டத்தில் குழாய்கள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.இவற்றையும் ஆய்வு செய்த கமிஷனர், பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தினார்.