ஆன்மிகம்
ஆவணி பெருவிழா
ஸ்ரீ மஹா கணபதி, ஸ்ரீ பராசக்தி மாரியம்மன் கோவில், காந்திநகர் மேற்கு, அவிநாசி ரோடு, திருப்பூர். பால்குடம், தீர்த்த குடம் எடுத்தல், அபிேஷகம், அலங்கார பூஜை, அன்னதானம் - காலை 9:15 மணி. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ஊர்வலம், முளைப்பாலிகை, மாவிளக்கு ஊர்வலம் - மாலை 4:45 மணி.
பொங்கல் விழா
ஸ்ரீ கோட்டை முனியப்பன் கோவில், சக்தி நகர், பிச்சம்பாளையம் புதுார், பி.என்., ரோடு, திருப்பூர். தீர்த்தம் எடுத்து வருதல் - மாலை 6:00 மணி. படைக்கலம் கும்பம் ஜோடித்து எடுத்து வருதல் - இரவு 9:00 மணி. அம்மை அழைத்தல் - நள்ளிரவு 12:00 மணி.
* ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில், வீரப்பகவுண்டன் வலசு, பொன்னிவாடி, தாராபுரம். கணபதி ஹோமம் - அதிகாலை 5:00 மணி. அம்மனுக்கு பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் - காலை 6:00 மணி. பூணுால் அணிதல் - காலை 7:00 மணி. அலங்கார பூஜை, தீபாராதனை, அம்மன் திருவீதி உலா, அன்னதானம் - காலை 11:00 மணி.
தொடர் சொற்பொழிவு
திருத்தொண்டர் புராணம், பெரிய புராணம் தொடர் சொற்பொழிவு, சைவர் திருமடம், குமரன் ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. பங்கேற்பு: பவானி வேலுச்சாமி. மாலை 6:00 முதல் இரவு 7:30 மணி வரை.
பொது
குறைகேட்பு கூட்டம்
பொது மக்கள் குறைகேட்பு கூட்டம், கூட்ட அரங்கம், கலெக்டர் அலுவலக வளாகம், பல்லடம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
பயிலரங்கம்
புதுக்கவிதைப் பயிலரங்கம், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, காலேஜ் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: தமிழ் உயராய்வுத்துறை. பங்கேற்பு: கவிஞர் பிருந்தா சாரதி. காலை 11:30 மணி.
பிறந்த நாள் விழா
த.மா.கா., தலைவர் மூப்பனார், 93 வது பிறந்த நாள் விழா, பஸ் ஸ்டாண்ட் அருகில், பல்லடம். ஏற்பாடு: தமிழ் மாநில காங்கிரஸ். காலை 8:00 மணி.
மாட்டுச்சந்தை
சந்தை மைதானம், அமராவதிபாளையம், கோவில்வழி, தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 8:00 மணி முதல்.
விளையாட்டு
கபடி போட்டி
மாணவியர் கபடி போட்டி, ஜெய்சாரதா வித்யாலயா பள்ளி, சிறுபூலுவப்பட்டி, திருப்பூர். காலை 10:00 மணி.
கால்பந்து போட்டி
பதினேழு வயது பிரிவினருக்கு, மாணவர் கால்பந்து போட்டி, மைக்ரோ கிட்ஸ், கணியாம்பூண்டி. காலை, 10:00 மணி.
* பதினான்கு வயது பிரிவு கால்பந்து போட்டி, விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக், கே.செட்டிபாளையம், தாராபுரம் ரோடு, திருப்பூர். காலை 10:00 மணி.
பால்பேட்மின்டன் போட்டி
மாணவ, மாணவியர் அனைத்து பிரிவினருக்கான பால்பேட்மின்டன் போட்டி, வித்யவிகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஜெய்நகர், காங்கயம் ரோடு, திருப்பூர். காலை 9:00 மணி.

