sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இன்று இனிதாக: திருப்பூர்  

/

இன்று இனிதாக: திருப்பூர்  

இன்று இனிதாக: திருப்பூர்  

இன்று இனிதாக: திருப்பூர்  


ADDED : செப் 15, 2024 01:28 AM

Google News

ADDED : செப் 15, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

கும்பாபிேஷக விழா

ஸ்ரீ தேவி பூமா தேவி, சமேத ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள், ஸ்ரீ விஷ்வக்சேனர், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீ சுதர்ஸனர், ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீ ஆண்டாள் கோவில், கணியாம்பூண்டி, அவிநாசி. நான்காம் கால பூஜை, பிரதிஷ்டா ேஹாமம், நாடி சந்தானம் - அதிகாலை 4:30 மணி. கும்பங்கள் புறப்பாடு, மகா தீபாராதனை, மகா கும்பாபிேஷகம் - காலை 6:14 முதல் 8:14 மணி வரை. அன்னதானம் - காலை 9:00 மணி முதல்.

* அபிேஷகவல்லி உடனமர், ஸ்ரீ ஐராவதீஸ்வரர் கோவில், அபிேஷகபுரம், மேற்குபதி, தொரவலுார், பெருமாநல்லுார். விநாயகர் பூஜை, இரண்டாம் கால யாக பூஜை, அஷ்டபந்தனம் - காலை 9:00 மணி. பூர்ணாகுதி, உபசார வழிபாடு - மதியம் 12:00 மணி. மூன்றாம் கால யாக பூஜை, மூலமந்திரயாகம், பூர்ணாகுதி - மாலை 4:00 மணி. நாட்டியம் திருமுறை பாராயணம் வழிபாடு - இரவு 8:00 மணி. இன்னிசை பட்டிமன்றம் - இரவு 8:00 மணி.

* ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீ ராஜமாதங்கி, ஸ்ரீ மஹாவாராஹி, ஸ்ரீ ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர், ஜகன்மாதா ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்பாள், ஐஸ்வர்யா கார்டன், ராக்கியாபாளையம், திருப்பூர். நான்காம் கால யாக பூஜை, விமான ஸ்துபி கலஸஸ்தாபனம், திரவ்யாஹூதி - காலை 8:30 மணி. ஐந்தாம் கால யாக பூஜை, பூர்ணாகுதி - மாலை 5:30 மணி. பிம்பசுத்தி, ரக்ஷா பந்தனம் - இரவு 8:00 மணி.

* ஸ்ரீ விஷ்வக்ேஷனர், ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீஸ்ரீ ஆதிகேசவ பெருமாள், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் கோவில், மங்கலம். நான்காம் கால யாக பூஜை, மகா பூர்ணாகுதி, சாற்றுமுறை - அதிகாலை 5:30 மணி. மகா கும்பாபிேஷகம் - காலை 9:00 முதல், 10:00 மணி வரை. மகா தீபாராதனை - காலை 10:00 மணி.

* ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில், சக்திநகர், பொங்கலுார். இரண்டாம் கால யாக பூஜை, விநாயகர் வழிபாடு, காயத்ரி மந்த்ர ேஹாமம், 108 மூலிகை திரவ்ய ேஹாமம் - அதிகாலை 5:00 மணி. மகா கும்பாபிேஷகம் - காலை 7:40 முதல் 9:00 மணி வரை. அன்னதானம் - காலை 8:00 மணி.

* விநாயகர், மாரியம்மன் கோவில், ராயர்பாளையம், அவிநாசி. நான்காம் கால யாக பூஜை - அதிகாலை 5:30 மணி. திருக்குடங்கள் கோவிலை வலம் வருதல் - காலை 7:15 மணி. கும்பாபிேஷகம் - காலை 7:25 முதல், 7:45 மணி வரை. அன்னதானம் - காலை, 8:00 மணி முதல். பெருந்திருமஞ்சனம், அலங்கார பூஜை - காலை 9:30 மணி. மங்கை வள்ளி கும்மியாட்டம், கலைநிகழ்ச்சி - மாலை 6:00 மணி.

பிரதோஷ பூஜை

ஸ்ரீ சுக்ரீஸ்வரர், ஸ்ரீ ஆவுடைய நாயகி அம்மன் கோவில், எஸ்.பெரியபாளையம், ஊத்துக்குளி ரோடு, திருப்பூர். அபிேஷக பூஜை, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை, சுவாமி திருவீதி உலா - மாலை 4:00 மணி.

திருவாசகம் விளக்க உரை

சைவர் திருமடம், முத்து ஓட்டல் அருகில், மங்கலம் ரோடு, அவிநாசி. சொற்பொழிவாளர்: அப்பரடிப்பொடி சொக்கலிங்கம். மாலை, 6:30 மணி முதல் இரவு, 8:30 மணி வரை.

தொடர் முற்றோதுதல்

பன்னிரு திருமுறை தொடர் முற்றும் ஓதுதல், திருமுருகநாத சுவாமி கோவில், திருமுருகன்பூண்டி. ஏற்பாடு: சைவ சித்தாந்த சபை. மாலை 5:00 முதல் இரவு 7:00 மணி வரை.

மண்டல பூஜை

குலாலர் பிள்ளையார் கோவில், ஈஸ்வரன் கோவில் வீதி, திருப்பூர். காலை 7:00 மணி.

* ஸ்ரீ வலம்புரி விநாயகர், ஸ்ரீ மாகாளியம்மன், ஸ்ரீ சவுடேஸ்வரி அம்மன் கோவில், குமாரபாளையம், சோமனுார். காலை, 6:30 மணி.

* வாலீஸ்வரர் கோவில், சேவூர், அவிநாசி. காலை 6:00 மணி.

* பிளேக் மாரியம்மன் கோவில், 15 வேலம்பாளையம், அவிநாசி ரோடு, திருப்பூர். காலை 11:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை.பொது

மேடை நாடகம்

'தெய்வத்துள் தெய்வம்' எனும் தலைப்பில், காஞ்சி ஸ்ரீ மகா பெரியவரின் வாழ்க்கை வரலாறு, மேடை நாடகம், ஏ.வி.பி., பள்ளி அரங்கம், காந்திநகர், திருப்பூர். ஏற்பாடு: எஸ்.எஸ்., இன்டர்நேஷனல், சிட்டி யூனியன் வங்கி. மாலை 6:30 மணி.

திறப்பு விழா

ரம்யா நியூரோ வலி நிவாரண மையம் மருத்துவமனை திறப்பு விழா, என்.பி.எஸ்., காம்பளக்ஸ், நொச்சிபாளையம் பிரிவு, பல்லடம் ரோடு, திருப்பூர்.

பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா, மாநகர மாவட்ட அலுவலகம், கே.எஸ்.சி., ஸ்கூல் ரோடு, திருப்பூர். ஏற்பாடு: அ.தி.மு.க., காலை 10:00 மணி.

மருத்துவ முகாம்

இலவச கண் சிகிச்சை ஆலோசனை முகாம், லயன்ஸ் கிளப் அலுவலகம், டவுன்ஹால், குமரன் ரோடு, திருப்பூர். காலை 8:00 முதல் மதியம் 12:00 மணி வரை.

துாய்மை பணி

நான்காவது வார துாய்மை பணி துவக்கம், குளக்கரை, அவிநாசி. காலை 7:00 முதல், 9:00 மணி வரை.






      Dinamalar
      Follow us