/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிலம்பாட்ட பயிற்சி :அசத்திய மாணவர்கள்
/
சிலம்பாட்ட பயிற்சி :அசத்திய மாணவர்கள்
ADDED : மே 28, 2024 12:43 AM
திருப்பூர்:கோடை கால சிலம்பாட்ட பயிற்சியின் நிறைவாக நடந்த போட்டியில் மாணவ, மாணவியர் திறமையில் அசத்தினர்.
திருப்பூர், முத்தமிழ் சிலம்பம் ஆசிரியர் கிருஷ்ணன், சிவகங்கை, சகி வீர சிலம்பம் ஆசிரியர் பாலமுருகன், உடுமலை யுகன் சிலம்ப கலைக்கூட ஆசிரியர் திவ்யா ஸ்ரீ, சங்கத்தமிழ் வீர சிலம்பம் ஆசிரியர் சந்திரன் ஆகியோர் இணைந்து, கோடை கால சிலம்ப பயிற்சியை, மாணவ, மாணவியருக்கு வழங்கினர். நிறைவையொட்டி நடந்த போட்டி, புது ராமகிருஷ்ணாபுரம் பள்ளி மைதானத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில், திருப்பூர் மாநகராட்சி, 2ம் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், போட்டியை துவக்கி வைத்தார். புது ராமகிருஷ்ணாபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராஜேஸ்வரி, துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் நடராஜன், கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். இதில், 150க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் பங்கேற்று, தங்களின் திறமை வெளிக்காட்டினர். அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.