/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்
/
செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம்
ADDED : செப் 09, 2024 11:38 PM

திருப்பூர்:திருப்பூர் வஞ்சிபாளையம், தீரன் சின்னமலை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் கணினி துறை, கோடு அண்ட் ஹேக்கர்ஸ் கிளப், கம்ப்யூட்டர் லிட்டரசி கிளப் இணைந்து ஏ.ஐ., என்னும் செயற்கை நுண்ணறிவு குறித்த கருத்தரங்கம் கல்லுாரி வளாகத்தில் நடந்தது. கல்லுாரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப் தலைமை வகித்தார்.
அறக்கட்டளை பொருளாளர் கந்தசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குமார் நகர் மாநகராட்சி பள்ளி ஆசிரியை கல்பனா பங்கேற்று செயல் விளக்கத்துடன் பேசினார். கணிதத்துறை பேராசிரியைகள் சத்யா, கணினி தொழில்நுட்ப துறை தலைவர் ஆர்த்தி ஆகியோர் ஒருங்கிணைத்து நடத்தினர். செயற்கை நுண்ணறிவு துறையின் துறை தலைவர் சத்யா நன்றி கூறினார்.

