/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுபான்மையினருக்கு 'தாட்கோ' திட்ட கடனுதவி
/
சிறுபான்மையினருக்கு 'தாட்கோ' திட்ட கடனுதவி
ADDED : ஜூன் 12, 2024 10:39 PM
திருப்பூர் : 'தாட்கோ' திட்டத்தில், சிறுபான்மையின மக்கள் மேம்பாட்டுக்கான கடன் உதவி வழங்கப்படுகிறது. கல்விக்கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன், மகளிர் குழு கடன்கள் வழங்கப்படுகின்றன.
திட்டம் 1ல், ஆண்டு குடும்ப வருமானம், 1.20 லட்சம் ரூபாய்க்கு மிகாத நகர்ப்புற மக்களும், 98 ஆயிரம் ரூபாய்க்கு மிகாத கிராமப்புற மக்களும் பயன்பெறலாம்; திட்டம் 2ல் பயன்பெற, குடும்ப ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
திட்டம் 1ல் தனிநபர் கடன் 6 சதவீத வட்டியில் அதிகபட்சமாக, 20 லட்சம் ரூபாய்; திட்டம் 2ல், ஆண்களுக்கு எட்டு சதவீதம், பெண்களுக்கு ஆறு சதவீத வட்டியில், அதிகபட்சமாக, 30 லட்சம் ரூபாய் வரை கடன் கிடைக்கும். கைவினை கலைஞர்களுக்கு ஐந்து சதவீதம், பெண்களுக்கு நான்கு சதவீத வட்டியில், 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படும். மகளிர் குழுவினருக்கு, தலா ஒரு லட்சம் ரூபாய், ஏழு சதவீத வட்டியில் வழங்கப்படும். கல்விக்கடனாக, மூன்று சதவீத வட்டியில், திட்டம் 1ல் 20 லட்சம் ரூபாயும்; திட்டம் 2ல், மாணவருக்கு எட்டு சதவீதம், மாணவியருக்கு ஐந்து சதவீத வட்டியில், 30 லட்சம் ரூபாய் வரையிலும் கல்விக்கடன் வழங்கப்படும்.
மாவட்டத்தில் வசிக்கும், கிறிஸ்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின கடன் விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து ஆவணங்களுடன் சமர்ப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு, 0421 2999130 மற்றும் dbcwtpr@gmail.com.