/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பள்ளியில் தமிழ் கூடல் விழா விழிப்புணர்வு நாடகம்
/
பள்ளியில் தமிழ் கூடல் விழா விழிப்புணர்வு நாடகம்
ADDED : டிச 09, 2024 08:12 AM
உடுமலை : உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், தமிழ் கூடல் விழா நடந்தது. இதில், மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடந்தன.
அரசு பள்ளிகளில், தமிழை வளர்க்கும் வகையில், மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவ்வகையில், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அவர்களின் திறன்களை மேம்படுத்தவும் தமிழ் கூடல் நிகழ்ச்சி நடக்கிறது.
உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இந்நிகழ்ச்சி நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் விஜயா தலைமை வகித்தார். தமிழாசிரியர் சின்னராசு வரவேற்றார். உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார். பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ஆரிபா, தமிழ் மொழியின் சிறப்பு குறித்து பேசினார்.
ஆசிரியர் சுமதி, 'தமிழர் உணவு முறையும் மருத்துவமும்' என்ற தலைப்பில் பேசினார். மாணவியரின் விழிப்புணர்வு நாடகம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்நிகழ்ச்சிகளில், மாணவியர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு, தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, மற்றும் கவிதைபோட்டி நடத்தப்பட்டு பரிசுகள்,பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன. தமிழாசிரியர்கள் ராஜேந்திரன், தைலியண்ணன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர்.