/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்'
/
'ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்'
'ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்'
'ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்'
ADDED : ஆக 18, 2024 01:33 AM

பல்லடம்;'அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தைப் போன்று ஆனைமலையாறு - நல்லாறு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும்'' என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்திக்கடவு - அவிநாசி திட்டம் நேற்று செயல்பாட்டுக்கு வந்தது. இதுகுறித்து விவசாய சங்கத் தலைவர்களின் கருத்துகள்:
செல்லமுத்து, மாநில தலைவர், உழவர் உழைப்பாளர் கட்சி: நீண்ட கால கோரிக்கையான அவிநாசி- அத்திக்கடவு திட்டத்துக்காக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் முயற்சிகள் மேற்கொண்ட போதும், முன்னாள் முதல்வர் பழனிசாமி திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கினார். கடந்த ஆட்சிக்காலத்திலேயே, 80 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில், மூன்று ஆண்டு காலமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது. தற்போது, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை உண்ணாவிரத போராட்டம் அறிவித்த பின், அவசர கதியில் இதை செயல்படுத்த முன்வந்துள்ளது தமிழக அரசு.
எப்படியாயினும், விவசாயிகள் மத்தியில் இத்திட்டம் வரவேற்கத்தக்க திட்டமாகும். குழாய் உடைப்பு, நீர் சேதம் ஆகியவை நடக்காமல் இருப்பதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
விடுபட்ட குளம், குட்டைகளையும் இத்திட்டத்தில் சேர்த்து, அனைத்துப் பகுதி விவசாயிகளும் பயனடைய செய்ய வேண்டும். இதேபோல், நீண்ட காலமாக கிடப்பில் உள்ள ஆனைமலை- - நல்லாறு திட்டத்தையும் தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
வெற்றி, செயல் தலைவர், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம்: கடந்த, 60 ஆண்டுகளுக்கு மேலாக நடந்த அவிநாசி- - அத்திக்கடவு திட்ட போராட்டத்துக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் தீர்வு கிடைத்தது. பல்வேறு சூழ்நிலைகளுக்கு இடையே, ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், கடந்த மூன்று ஆண்டுகளாக திட்டம் நடைமுறைக்கு வரவில்லை.
திட்டம் தாமதமானது அனைவருக்கும் கவலையை அளித்தது. தற்போது தமிழக முதல்வரால் திட்டம் துவங்கப்பட்டது அனைவருக்கும் மகிழ்ச்சியையும், புத்துணர்ச்சியையும் கொடுத்துள்ளது. இத்திட்டத்தில் விடுபட்டுள்ள 1300க்கும் மேற்பட்ட குளம் - குட்டைகளையும் இதில் இணைக்க வேண்டும்.
இதன் மூலம், கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளட்ட மூன்று மாவட்டங்களும் வேளாண்மையில் மேலும் வளர்ச்சி பெற வாய்ப்புள்ளது. இப்பகுதி மக்களின் வாழ்வாதாரமும் மேம்படும்.
இதேபோல், ஆனைமலை -- நல்லாறு திட்டத்தால் மட்டுமே திருப்பூர் மாவட்டத்தின் தெற்கு பகுதி வளர்ச்சி பெறும். முன்னாள் முதல்வர் காமராஜரால் கொண்டுவரப்பட்ட இத்திட்டத்தின் மூலம், 4.50 லட்சம் பாசன நிலங்கள் பயனடையும். ஆனைமலை- - நல்லாறு திட்டத்தையும் தமிழக அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.

