/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தமிழாசிரியை மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
/
தமிழாசிரியை மகள் ஐ.ஏ.எஸ்., தேர்வில் வெற்றி
ADDED : ஏப் 18, 2024 12:40 AM

திருப்பூர்:திருப்பூர், மங்கலம் சாலை, எஸ்.ஆர்., பகுதியை சேர்ந்தவர் தாரணி, 27. பல் டாக்டரான இவர், 2019ல் ஐ.ஏ.எஸ்., தேர்வெழுதும் முயற்சியை துவக்கினார். கடந்த ஆண்டில் நான்காவது முறையாக தேர்வை எதிர்கொண்டார். இதில், 250வது இடத்தை பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.
லிட்டில் பிளவர் மெட்ரிக் பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த இவர், மேல்நிலைக் கல்வியை திண்டல் பி.வி.பி., மெட்ரிக் பள்ளியில் முடித்தார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி கல்லுாரியில் பல் மருத்துவ படிப்பு முடித்துள்ளார்.
தாரணியின் தந்தை முருகானந்தம், துணிக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சோழன்மாதேவி, இடுவம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியை.
தாரணி கூறுகையில், ''பெண்கள் உயர் பதவிக்கும், பொறுப்புக்கும் வர வேண்டும் என்ற எண்ணத்தில் தேர்வுக்கு தொடர்ந்து தயாராகினேன். கொரோனா காலத்தில் தடைபட்ட என் முயற்சி, மீண்டும் 2023ல் வெற்றியானது. கோச்சிங் எதுவும் செல்லவில்லை,'' என்றார்.

