ADDED : ஆக 22, 2024 12:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் அறிக்கை:
ஏப்., 30ம் தேதிக்குள் சொத்து வரியினை செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, 5 சதவீதம் ஊக்கத் தொகையும், இரண்டாம் அரையாண்டுக்கான சொத்து வரியினை அக்., 31ம் தேதிக்குள் செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
நேரடியாக வேலை நாட்களில் காலை, 9:30 முதல் மாலை, 5:00 மணி வரை மைய அலுவலக கணினி வரி வசூல் மையம், நான்கு மண்டல அலுவலகம், குமரன் வணிக வளாகம், தொட்டிபாளையம், முத்தணம்பாளையயம், வீரபாண்டி, முருகம்பாளையம், பாண்டியன் நகர் ஆகிய கணினி வரி வசூல் மையங்களில் பணமாகவோ அல்லது காசோலை மூலமாகவே வரி மற்றும் கட்டணங்களை செலுத்தலாம். எளிய முறையில் இணையதளம் வழியாக செலுத்தலாம்.