/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எளிதாக பாடம் கற்பியுங்கள்; ஆசிரியர்களுக்குப் 'பாடம்'
/
எளிதாக பாடம் கற்பியுங்கள்; ஆசிரியர்களுக்குப் 'பாடம்'
எளிதாக பாடம் கற்பியுங்கள்; ஆசிரியர்களுக்குப் 'பாடம்'
எளிதாக பாடம் கற்பியுங்கள்; ஆசிரியர்களுக்குப் 'பாடம்'
ADDED : ஜூன் 27, 2024 11:26 PM

திருப்பூர் : பள்ளி கல்வித்துறை, திருமூர்த்தி நகர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான துவக்கப்பள்ளி ஆசிரியர் களுக்கு 'எண்ணும் எழுத்தும்' பயிற்சி, கடந்த 25ம் தேதி துவங்கியது. மாவட்டத்தில் உள்ள, 13 கல்வி வட்டாரங்களில் இப் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
திருப்பூர் வடக்கு பகுதிக்கு உட்பட்ட பள்ளி ஆசிரியர்களுக்கு, 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது.
ஜூலை 2ல் பயிற்சி நிறைவு பெறுகிறது.
கடந்த கல்வி ஆண்டில் நடைபெற்ற அடைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர்களின் திறன் எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது, அதை எவ்வாறு மேம்படுத்துவது என்பது குறித்து விளக்கிக் கூறப்பட்டது.
பயிற்சி முகாமில் பேசிய கருத்தாளர்கள்,'ஆசிரியர் வகுப்பறையை அமைதியாக்க வேண்டும். மாணவ, மாணவியருக்கு எளிதில் புரியும் வகையில் வகுப்பறையில் பாடம் கற்பிக்க வேண்டும்; அப்போது தான் அவர்கள் நம்மையும், பாடத்தை கவனிப்பர்; உற்றுநோக்குவர்,' என, அறிவுரைகளை வழங்கினர்.