ADDED : ஏப் 27, 2024 01:46 AM

திருப்பூர்;பதினைந்தாம் ஆண்டு விழாவை முன்னிட்டு, திருப்பூர் - அவிநாசி ரோடு, பிரைம் அப்பார்ட்மென்ட் எதிரே செயல்படும் டெலிபிரெஷ் ஹைபர் மார்க்கெட் மற்றும் கேக் லாஞ்ச்சில், கேக் திருவிழா நேற்று முதல் துவங்கியது; நாளை வரை நடக்கிறது.
புத்தாண்டு, பிறந்தநாள், திருமணம், கிறிஸ்துமஸ் உள்பட அனைத்து வகை கொண்டாட்டங்கள், குட்டீைஸ கவரும் கார்ட்டூன்கள், ஏஞ்சல் பொம்மை உருவங்கள், பொம்மைகள் என விதவித அலங்காரங்களுடன், 500க்கும் மேற்பட்ட மெகா கேக் மாடல்கள் தயாரிக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் அனைவரும், கேக் திருவிழாவை பார்வையிடலாம்.
மும்பையில் இருந்து வந்துள்ள பிரபல ஷெப்கள், கேக் தயாரிப்பு குறித்த நுணுக்கங்களை, செயல் விளக்கமாக கற்றுக் கொடுக்கின்றனர். சிறுமியர், பெண்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று, கேக் தயாரித்து அசத்துகின்றனர்.
ஆண்டுவிழாவை முன்னிட்டு, பிஸ்கெட், டீ - கேக், ப்ரூட் கேக், கப் கேக்களுக்கு, ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
மளிகைப்பொருட்கள், கேக் ரகங்கள் ஆர்டர் செய்வது; கேக் திருவிழாவில் பங்கேற்பது குறித்து தெரிந்துகொள்ள, 96551 27755 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

