/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தற்காலிக இரவு காவலர்கள் நியமிக்கணும்! மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்
/
தற்காலிக இரவு காவலர்கள் நியமிக்கணும்! மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்
தற்காலிக இரவு காவலர்கள் நியமிக்கணும்! மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்
தற்காலிக இரவு காவலர்கள் நியமிக்கணும்! மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்தல்
ADDED : ஆக 31, 2024 02:02 AM
உடுமலை;உடுமலை சுற்றுவட்டார அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தற்காலிக இரவு காவலர்கள் நியமிக்க, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
உடுமலை வட்டாரத்தில், நுாற்றுக்கும் அதிகமான அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர்.பெரும்பான்மையான பள்ளிகள் கிராமப்பகுதிகளில் தான் உள்ளது.
இப்பள்ளிகளில் விடுமுறை நாட்கள் என்றாலே, ஆசிரியர்கள் அச்சத்துக்குள்ளாகும் நிலைதான் உள்ளது. அந்நாட்களில் சமூக விரோதிகள் பள்ளிக்குள் விதிமுறை மீறி நுழைந்து விடுகின்றனர்.
கண்ணம்மநாயக்கனுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், விடுமுறை நாட்களில் சமூக விரோதிகள் நுழைந்து, கதவுகளில் உள்ள பூட்டுகளில் தார் ஊற்றிச்செல்வது, ஜன்னல்களில் கீறல் போடுவது, மது பாட்டில்களை உடைத்து வீசுவது தொடர்ந்து இப்பிரச்னை நடக்கிறது.
பள்ளி நிர்வாகத்தினரின் முயற்சியால் தற்போது குறைந்துள்ளது. இருப்பினும் நீண்ட நாட்கள் விடுமுறையின் போது ஆசிரியர்கள் அச்சத்துடன்தான் பள்ளியை விட்டுச்செல்ல வேண்டியுள்ளது.
பள்ளிக்கு அருகிலுள்ள நிழற்கூரையில், காலை நேரங்களில் மது அருந்துவது, பள்ளிக்கு முன்பு மது பாட்டில்களை வீசிச்செல்வதும் நடக்கிறது.
கண்ணம்மநாயக்கனுார் பள்ளி மட்டுமின்றி, 50 சதவீத கிராமப்பகுதி பள்ளிகளிலும் இந்நிலை தான் ஏற்படுகிறது.
உள்ளாட்சி நிர்வாகமும், போலீஸ்துறையும், கல்வித்துறையும் பிரச்னை குறித்து புகார் அளிக்கும் தருணத்தில், ஆய்வு மட்டுமே நடத்துகின்றனர். அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதில்லை.
பள்ளிகளிலுள்ள விலையுயர்ந்த பொருட்களான லேப்-டாப், கம்ப்யூட்டர் மற்றும் 'பென்ச்' உட்பட பல்வேறு பொருட்கள் திருடு போய்விடுமோ என, பள்ளி நிர்வாகத்தினர் அச்சத்தில் இருக்க வேண்டியுள்ளது.
தற்போது உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில், இரவுக்காவலர்கள் நியமிக்க அரசு அறிவித்துள்ளது.
இருப்பினும், துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் சரளமாக இப்பிரச்னை நடப்பதால், இப்பள்ளிகளுக்கும் இரவுக்காவலர்கள் கட்டாய தேவையாக உள்ளது.
இவ்வாறு பிரச்னை உள்ள பள்ளிகளில், தற்காலிக இரவுக்காவலர்கள் நியமிப்பதற்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.