/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாவட்டத்தில் சராசரியாக 9.88 மி.மீ., மழைப்பொழிவு
/
மாவட்டத்தில் சராசரியாக 9.88 மி.மீ., மழைப்பொழிவு
ADDED : மார் 14, 2025 10:51 PM
திருப்பூர் மாவட்டம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக கோடை மழை தொடர்ந்து பெய்தது. நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணி வரையிலான 24 மணி நேரத்தில், மாவட்டத்தில் சராசரியாக 9.88 மி.மீ., மழைபதிவாகியுள்ளது.
அதிகபட்சமாக குண்டடத்தில் 45 மி.மீ., - அவிநாசியில், 36; வட்டமலைக்கரை ஓடையில் 28 மி.மீ.,க்கு மிதமான மழை பெய்தது. கலெக்டர் முகாம் அலுவலக பகுதிகளில் 14 மி.மீ., - மடத்துக்குளத்தில் 10; உடுமலையில், 9; உப்பாறு அணையில், 9; தாராபுரத்தில், 8; வெள்ளகோவிலில் 8 ஊத்துக்குளியில் 7.50; நல்லதங்காள் ஓடையில் 4; திருமூர்த்தி அணையில், 4; திருமூர்த்தி அணையில் (ஐ.பி.,), 4; திருப்பூர் வடக்கு தாலுகா அலுவலக பகுதிகளில் 3 மி.மீ.,க்கு லேசான மழை பதிவாகியுள்ளது.
திருப்பூர் தெற்கு, கலெக்டர் அலுவலக பகுதிகள், அமராவதி அணை, பகுதிகளில் மிக லேசான மழை பெய்தது.
நேற்றைய நிலவரப்படி, அமராவதி அணையில், மொத்தமுள்ள, 90 அடியில், 51.74 அடிக்கு நீர்மட்டம் உள்ளது. வினாடிக்கு, 170 கன அடி நீர் வரத்து உள்ளநிலையில், 170 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
திருமூர்த்தி அணையில் மொத்தமுள்ள, 60 அடியில், நீர்மட்டம் 50.62 அடியாக உள்ளது. வினாடிக்கு, 728 கன அடி தண்ணீர் வரத்து உள்ள நிலையில், 463 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
- நமது நிருபர் -