/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடையால் அமைதி சீர்குலையும்! பள்ளிவாசல் நிர்வாகிகள் போலீசில் புகார்
/
மதுக்கடையால் அமைதி சீர்குலையும்! பள்ளிவாசல் நிர்வாகிகள் போலீசில் புகார்
மதுக்கடையால் அமைதி சீர்குலையும்! பள்ளிவாசல் நிர்வாகிகள் போலீசில் புகார்
மதுக்கடையால் அமைதி சீர்குலையும்! பள்ளிவாசல் நிர்வாகிகள் போலீசில் புகார்
ADDED : ஜூலை 25, 2024 11:28 PM

பல்லடம் : பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி சின்னக்கரை பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. இப்பகுதி பொதுமக்கள் மத்தியில் இதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், நேற்று, சின்னக்கரை பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் த.மு.மு.க., சார்பில், பல்லடம் போலீசாரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.
அவர்கள் கூறியதாவது:
விதிமுறைகளை மீறி, பல்லடம் - -திருப்பூர் நெடுஞ்சாலைக்கு மிக அருகில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. சின்னக்கரை பகுதியில், பள்ளி, கல்லுாரிகள், பள்ளிவாசல், பனியன் நிறுவனங்கள் உள்ளிட்டவை உள்ளன. மதுக்கடை இங்கு அமையுமானால், வாகன விபத்துகள் அதிகரிக்கும்.
ஏற்கனவே, இப்பகுதியில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடந்து வரும் நிலையில், மதுக்கடை அமைவதால் குற்ற சம்பவங்கள் மேலும் அதிகரிக்கும். பள்ளி கல்லுாரி மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தினசரி வழியாக வந்து செல்கின்றனர். மதுக்கடையால் இப்பகுதியின் அமைதி சீர்குலையும். பொதுமக்களுக்கு பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், சின்னக்கரை பகுதியில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
முன்னதாக, டி.எஸ்பி., விஜிகுமார் மற்றும் பல்லடம் இன்ஸ்பெக்டரிடமும் புகார் அளிக்கப்பட்டது. கோரிக்கை குறித்து, கலெக்டர் மற்றும் டாஸ்மாக் மண்டல மேலாளர் ஆகியோருக்கு பரிந்துரை செய்வதாக,  டி.எஸ்.பி., தெரிவித்தார்.

