/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அங்கக வேளாண்மையால் பலன்கள் ஏராளம்; பயிற்சி முகாமில் தகவல்
/
அங்கக வேளாண்மையால் பலன்கள் ஏராளம்; பயிற்சி முகாமில் தகவல்
அங்கக வேளாண்மையால் பலன்கள் ஏராளம்; பயிற்சி முகாமில் தகவல்
அங்கக வேளாண்மையால் பலன்கள் ஏராளம்; பயிற்சி முகாமில் தகவல்
ADDED : ஆக 21, 2024 11:47 PM

உடுமலை : 'அங்கக வேளாண் முறைகளை பின்பற்றுவதால், மண் வளம் மேம்படுவதுடன் விவசாயிகளுக்கும் பல்வேறு நன்மைகள் கிடைக்கிறது,' என உயிர்ம சான்று ஆய்வாளர் ஹேமா பேசினார்.
உடுமலை வேளாண் விரிவாக்க மையத்தில், விதை சான்றளிப்பு மற்றும் அங்கக சான்றளிப்பு துறை சார்பில், விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
உடுமலை வட்டார வேளாண் உதவி இயக்குனர் தேவி தலைமை வகித்து, பசுந்தாள் உரம், உயிர் உரங்கள் பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
விதை சான்று மற்றும் உயிர்ம சான்று உதவி இயக்குனர் மணிகண்டன், தரமான விதை உற்பத்தி குறித்து பேசினார்.
உயிர்ம சான்று ஆய்வாளர் ேஹமா பேசியதாவது: அங்ககச்சான்று பெற அனைத்து வழிகாட்டுதல்களும், துறை சார்பில் வழங்கப்படுகிறது.
விளைநிலத்தை நாள்தோறும் பார்வையிடுவதால், பூச்சி மற்றும் இதர நோய்த்தாக்குதல் குறித்து கண்டறிய முடியும். பிரதான சாகுபடிக்கு நடவு செய்யும் முன்பே, வரப்பு பயிர்கள் குறித்து திட்டமிட வேண்டும்.
குறிப்பாக, பூச்சிகளை எளிதாக ஈர்க்கும், ஆமணக்கு, செண்டுமல்லியை வரப்புகளில் பயிரிட வேண்டும்.
இதனால், பிரதான பயிர்களை தாக்க வரும் பூச்சிகளை, வரப்பு பயிர்கள் எளிதாக ஈர்த்து விடும்; அதன் வாயிலாக, பிரதான சாகுபடியில், பயிர் பாதுகாப்பு முறைகளை பின்பற்றலாம்.
அங்ககச்சான்றை, தனிநபர் மட்டுமல்லாது, விவசாயிகள் குழுவினராக பெறவும் வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. அரசின் இணையதளம் வாயிலாக விவசாயிகள் நேரடியாக அங்கக சான்று பெற விண்ணப்பிக்கலாம்; அலுவலர்கள் விளைநிலங்களில், நேரடி ஆய்வு செய்து சான்றுக்கு பரிந்துரைப்பார்கள்.
அங்கக வேளாண்மை செய்வதால், நஞ்சில்லாத உணவு உற்பத்தியாகிறது; விவசாயிகளுக்கும் நல்ல விலை கிடைக்கிறது.
இவ்வாறு, பேசினார்.
முகாமில், உடுமலை வட்டாரத்தைச்சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.