/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பட்டத்தரசி அம்மன் பூச்சாட்டு விழா துவக்கம்
/
பட்டத்தரசி அம்மன் பூச்சாட்டு விழா துவக்கம்
ADDED : மார் 05, 2025 03:44 AM
திருப்பூர்:வேலாயுதம்பாளையம் பட்டத்தரசியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா வரும், 12ம் தேதி நடைபெறவுள்ளது.
இவ்விழா நேற்று பூச்சாட்டுடன் துவங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. வரும், 8ம் தேதி, கம்பம் நடும் நிகழ்ச்சி நடக்கிறது. 10ம் தேதி, காலை கோவில் வளாகத்தில் விநாயகர் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை அவிநாசி தீரன் குழுவினரின் கம்பத்தாட்டம் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
விழாவில், 12ம் தேதி மாவிளக்கு, முளைப்பாலிகை ஊர்வலம், பொங்கல் விழா நடக்கிறது. மாலை அம்மன் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். பட்டத்தரசியம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடைபெறும். 13ம் தேதி திருவிழா நிறைவாக மஞ்சள் நீராட்டு நடக்கிறது.