/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாக்குறுதியில் இடம் பெறாத கோரிக்கை; விசைத்தறியாளர்கள் கடும் அதிருப்தி
/
வாக்குறுதியில் இடம் பெறாத கோரிக்கை; விசைத்தறியாளர்கள் கடும் அதிருப்தி
வாக்குறுதியில் இடம் பெறாத கோரிக்கை; விசைத்தறியாளர்கள் கடும் அதிருப்தி
வாக்குறுதியில் இடம் பெறாத கோரிக்கை; விசைத்தறியாளர்கள் கடும் அதிருப்தி
ADDED : மார் 29, 2024 11:59 PM
பல்லடம்:தேர்தல் வாக்குறுதியில், தங்களின் நீண்ட கால கோரிக்கைகள் இடம் பெறாதது, விசைத்தறியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, திருப்பூர் மாவட்டங்களில் மட்டும், 2 லட்சத்துக்கும் அதிகமான விசைத்தறிகள் உள்ளன. விசைத்தறி தொழில் வளர்ச்சி பெற, தறிகளை மேம்படுத்துதல், பஞ்சு நுால் விலை உயர்வுக்கு தீர்வு, ரக ஒதுக்கீடு, ஜவுளி சந்தை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விசைத்தறியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், லோக்சபா தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறியாளர்களின் கோரிக்கைகளை எந்த அரசியல் கட்சிகளும் நிறைவேற்றுவதாக வலியுறுத்தவில்லை.
இதுகுறித்து திருப்பூர் - கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிர மணியம் கூறியதாவது:
விசைத்தறி தொழிலை பாதுகாக்கும் நோக்கில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பட்டியலை, அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகளிடமும் ஏற்கனவே வழங்கி உள்ளோம். லோக்சபா தேர்தலில் போட்டியிடும் கட்சி களின் தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழில் சார்ந்த வாக்குறுதிகளும் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தோம்.
எந்த கட்சியுமே தேர்தல் வாக்குறுதியில், விசைத்தறி தொழிலின் பிரச்னைகளை தீர்ப்பதாக வாக்குறுதி தரவில்லை. பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை மட்டும், சமீபத்தில் பல்லடம் வந்தபோது, விசைத்தறி தொழிலை பாதுகாப்பதாக உறுதி அளித்துள்ளார். அண்ணாமலை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

