/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வீட்டின் கதவு உடைத்து ரூ.ஒரு லட்சம் திருட்டு
/
வீட்டின் கதவு உடைத்து ரூ.ஒரு லட்சம் திருட்டு
ADDED : செப் 03, 2024 11:40 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார்:பொங்கலுார் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டு கதவை உடைத்து, ஒரு லட்சம் ரூபாயை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
பொங்கலுார் அருகே யுள்ள மூகாம்பிகை நகரை சேர்ந்தவர் வேலாயுதம், 58. ஓட்டல் நடத்துகிறார். நேற்று மாலை, 3:00 மணிக்கு வீட்டை பூட்டிவிட்டு ஓட்டலுக்கு சென்று விட்டார். மாலை, 5:30 மணிக்கு வீட்டிற்கு சென்று பார்த்தபோது, கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்து இருந்த ஒரு லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது.
இது குறித்து அவர், அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தார். திருடிய நபர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.