/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை ஆனாலும் 'சாய்ஸ்' கைகொடுத்தது
/
எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை ஆனாலும் 'சாய்ஸ்' கைகொடுத்தது
எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை ஆனாலும் 'சாய்ஸ்' கைகொடுத்தது
எதிர்பார்த்த கேள்விகள் வரவில்லை ஆனாலும் 'சாய்ஸ்' கைகொடுத்தது
ADDED : மார் 11, 2025 04:18 AM

திருப்பூர்: பிளஸ் 1 ஆங்கிலத்தேர்வு நேற்று நடந்தது. மாவட்டத்தில், 27 ஆயிரத்து, 176 பேர் தேர்வெழுத விண்ணப்பித்திருந்த நிலையில், 26 ஆயிரத்து, 771 பேர் தேர்வெழுதினர். 405 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை.
தேர்வு குறித்து மாணவ, மாணவியர் கூறியதாவது:
தங்க அர்ச்சனா: பாடங்களுக்கு பின்புறமுள்ள பகுதியில் இருந்து ஒரு மதிப்பெண் வினா அப்படியே கேட்கப்பட்டிருந்தது. 20 க்கு, 20 மதிப்பெண்களை ஒரு மதிப்பெண்ணில் பெற்று விட முடியும். முழுமையாக புத்தகத்தை படித்திருந்ததால், மூன்று மதிப்பெண் வினாவும் எழுதியிருக்க முடியும். நிச்சயம், 85 க்கும் அதிகமாக மதிப்பெண்களை பெற முடியும்.
வருண காவியா: முந்தைய ஆண்டு வினாத்தாள்களில் இடம் பெற்ற கேள்விகளுக்கு மாற்றாக சில கேள்விகள் கேட்கப்பட்டிருந்தது. ஐந்து மதிப்பெண் வினாவில், எதிர்பார்த்த இரண்டு கேள்விகள் இடம்பெறவில்லை. ஆனால், விடை எழுதும் வகையிலான கேள்விகளாவே அவை இருந்தன. தேர்வை நன்றாக எழுதியுள்ளேன். ஆங்கிலத்தில் கூடுதல் மதிப்பெண்களை பெற முடியும்.
பிரவீன்குமார்: 'பாரகிராப்' பகுதியில் வழக்கமாக கேட்கப்படும் கேள்வி இல்லை. மூன்று மதிப்பெண் வினாக்கள் இரண்டு மட்டும் சற்று யோசித்து விடையளிக்கும் வகையில் கேட்கப்பட்டிருந்தது. மற்ற வகையில் வினாத்தாளில் சிரமங்கள் எதுவும் இல்லை. ஒன்று, இரண்டு, ஐந்து மதிப்பெண்ணில் முழு மதிப்பெண்களை பெற்று விட முடியும்.
தீலன்: மூன்று மதிப்பெண் வினாவில் எதிர்பார்த்த கேள்விகள் இடம்பெறவில்லை. வழக்கமாக கேட்கப்படும் வினாக்கள் இல்லாததால், சற்று யோசித்து விடையளிக்க வேண்டியிருந்தது. இருப்பினும், ஒன்று, இரண்டு மதிப்பெண் வினாக்களில் முழுமதிப்பெண் பெற முடியும் என்பதால், தேர்வு எளிமையாக இருந்தது. நல்ல மார்க் கிடைக்கும்.தேர்ச்சி சதவீதம் குறையாது.
திருப்பூர், குமார் நகர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் ஆர்த்தி கூறியதாவது:
'பிராவர்ப்', 'நோட்டீஸ் மேக்கிங்' உள்ளிட்ட பகுதி கேள்விகள் மூன்று மதிப்பெண்ணில் இடம் பெறும். பிளஸ் 2 ஆங்கில வினாத்தாள் மாதிரியாக பின்பற்றி, அத்தகைய கேள்விகள் பிளஸ் 1 வினாத்தாளில் தவிர்க்கப்பட்டுள்ளது. 'ரைட்டிங் மெசேஜ்' பகுதிக்கான கேள்வியும் இடம் பெறவில்லை. ஐந்து மதிப்பெண், 47வது கேள்வி, 'செலக்டடு பீல்டு' என்ற கேள்வி இடம் பெறவில்லை. சராசரியாக படிக்கும் மாணவர் எதிர்பார்த்த கேள்வி வரவில்லை. அதேநேரம், 'சாய்ஸ்' இருந்தது. எனவே, முழுமையாக விடையளிக்க முடிந்திருக்கும். தேர்ச்சி சதவீதம் குறையாது. 'டாப்பர்ஸ்' அனைத்துக்கும் விடை எழுதியிருப்பர்; ஆங்கிலத்தில் சென்டம் பெறவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.