/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'உள்ளத்தின் அழுக்கு; வழிபாடு நீக்கும்'
/
'உள்ளத்தின் அழுக்கு; வழிபாடு நீக்கும்'
ADDED : ஆக 04, 2024 11:32 PM

பல்லடம் : ஆடி அமாவாசையை முன்னிட்டு, பல்லடம், சித்தம்பலம் நவகிரக கோட்டையில் மஹா மிருத்யுஞ்ஜய யாகம் நடந்தது. யாகத்தை துவக்கி வைத்து கோவை காமாட்சிபுரி ஆதீனம் பஞ்சலிங்கேஸ்வரர் பேசியதாவது:
கடவுளை வணங்கும்போது கைகளை தலைக்கு மேல் தான் வைத்து வணங்க வேண்டும். மந்திரங்களால் மட்டுமே கடவுளை அணுக முடியும். நாம் எல்லோருமே கடவுளுக்கு குழந்தைகள் தான். அனைவருக்கும் அம்மையப்பரே பெற்றோராக இருக்கின்றனர். நமக்கு கஷ்டம் வரும்போது கண்டிப்பாக கடவுள் நம் அருகில் இருப்பார்.
மார்க்கண்டேயன் சிவபெருமானை இறுகப்பற்றிக் கொண்டது போல், நாமும் கடவுளை பிடித்துக் கொள்ள வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வழிபடுவதன் மூலம், அனைத்து பாவங்களும், தோஷங்களும் விலகும் மாதம் ஆடி மாதம். நாம் இருக்கும் இடத்திலிருந்தே, நம் முன்னோர்களுக்கு ராமேஸ்வரத்தில் திதி செய்தது போல் நினைத்துக் கொண்டு வழிபட்டாலே போதும். உடலில் உள்ள அழுக்கை போக்க அன்றாடம் குளிக்கிறோம். உள்ளத்தில் உள்ள அழுக்கை போக்க கடவுள் வழிபாடு தேவை.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, மஹா மிருத்யுஞ்ஜய யாகத்தை தொடர்ந்து, பக்தர்கள் பூஜிக்கப்பட்ட தீர்த்தங்களை கொண்டு, குபேர லிங்கத்துக்கு அபிஷேகம் செய்தனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மையப்பராக சிவபெருமான் அருள் பாலித்தார். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.