/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆயுதங்களுடன் துரத்தி தாக்கிய கும்பல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
/
ஆயுதங்களுடன் துரத்தி தாக்கிய கும்பல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
ஆயுதங்களுடன் துரத்தி தாக்கிய கும்பல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
ஆயுதங்களுடன் துரத்தி தாக்கிய கும்பல் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
ADDED : ஆக 20, 2024 02:11 AM
உடுமலை;உடுமலையில், பிரதான ரோட்டில், ஒருவரை கல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஒரு கும்பல் துரத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலை பசுபதி வீதி, கச்சேரி வீதி பகுதியில், அரசு மருத்துவமனை, நகர கூட்டுறவு பண்டகசாலை மற்றும் வணிக நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள் உள்ள பகுதியில், நேற்று காலை, 8:00 மணிக்கு, கத்தி, செங்கல், டியூப் லைட் உள்ளிட்டவற்றால், ஒருவரை, ஒரு கும்பல் துரத்திக்கொண்டிருந்தது.
இதனைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து, அலறியடித்துக்கொண்டு ஓடினர். இது குறித்து உடுமலை போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்குச்சென்று விசாரணை நடத்தினர்.
இதில், யு.எஸ்.எஸ்., காலனியைச்சேர்ந்த திருமூர்த்தி, 30, என்பவரை, முன்விரோதம் காரணாக கும்பல் துரத்தி தாக்கியுள்ளது. இதில் காயமடைந்த திருமூர்த்தி, அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து, உடுமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து, யு.எஸ்.எஸ்., காலனியைச்சேர்ந்த மாரிமுத்து, 22, மணிகண்டன், 30 ஆகிய இருவரை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.
மேலும், இதில் தொடர்புடைய நந்தகுமார், 24, பிர்லா பிரசாந்த், 20 உள்ளிட்டோரை தேடி வருகின்றனர்.

