/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடகள போட்டியில் 'தகதக' என ஜொலித்த தங்கங்கள்!
/
தடகள போட்டியில் 'தகதக' என ஜொலித்த தங்கங்கள்!
ADDED : செப் 07, 2024 12:34 AM

திருப்பூர்:திருப்பூர் வடக்கு குறுமைய மாணவ, மாணவியர் தடகள போட்டி, அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவங்கியது.
பள்ளி, வட்டார அளவில் சிறந்த விளையாாட்டு வீரர், வீராங்கனைகளை உருவாக்குவதற்கான குறுமைய விளையாட்டு போட்டி, கடந்த ஆக., 12 ம் தேதி முதல் நடந்து வருகிறது. குழு போட்டிகள் முடிந்த நிலையில், நிலையில், நேற்று தடகள போட்டிகள் துவங்கியது. ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் வேலுச்சாமி, பள்ளி முதல்வர் மணிமலர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
வெற்றி பெற்றவர் விபரம்
மாணவர் பிரிவு
பதிநான்கு வயது பிரிவு, வட்டு எறிதல் முதலிடம், ரோகன், மூன்றாமிடம் சிவமணிகண்டன் (வித்யாமந்திர் பள்ளி). 2 வது இடம் யோதிஷ் (ஸ்ரீ சாய் மெட்ரிக்). 600 மீ., ஓட்டம் முதலிடம் சரண் (மாநகராட்சி நடுநிலைப்பள்ளி, வேலம்பாளையம்). 2 வது இடம், அமல்தேவ் (ஜெய்சாரதா பள்ளி), மூன்றாமிடம் ஷர்சித் (திருமுருகன் மெட்ரிக்).
பதினேழு வயது பிரிவு, 3000 மீ., ஓட்டம் முதலிடம் சேங்கியனால் (நஞ்சப்பா பள்ளி), 2 வது இடம் விஷால் (சின்னச்சாமி அம்மாள் பள்ளி), 3 வது இடம் ரபித்ரகுமான் (ஜெய்சாரதா பள்ளி). 19 வயது பிரிவு உயரம் தாண்டுதலில் முதலிடம் புனிதன் (ஜெய் சாரதா பள்ளி), இரண்டாமிடம் ஆதித்யா (ஸ்ரீ சாய் மெட்ரிக்), மூன்றாமிடம் மதன் (அனுப்பர்பாளையம் அரசு பள்ளி). 3000 மீ., ஓட்டம் முதலிடம் மற்றும் 2 வது இடம் முறையே பிரபாகரன், சுகுமார் (ஜெய்சாரதா பள்ளி), 3 வது இடம் யஷ்வந்த் (ஏ.வி.பி., பள்ளி)
மாணவியர் பிரிவு
பதினான்கு வயது குண்டெறிதல், முதலிடம் தேஜாஸ்ரீ, இரண்டாமிடம் ஸ்ரீநிதி (ஜெய்வாபாய் பள்ளி), மூன்றாமிடம் கோபிகா (கொங்கு வேளாளர் பள்ளி). 19 வயது உயரம் தாண்டுதல் முதலிடம் மீனகா, இரண்டாமிடம் நர்மதா (ஜெய்வாபாய் பள்ளி), மூன்றாமிடம் மகேஷ்வரி (ஸ்ரீ சாய் பள்ளி). குண்டெறிதல் முதலிடம் ராகவர்த்தினி (ஜெய்வாபாய் பள்ளி), இரண்டாமிடம் பூர்ணா (ஸ்ரீ சாய் பள்ளி), மூன்றாமிடம் அனுஸ்ரீ (ஜெய்சாரதா பள்ளி). 3000 மீ., ஓட்டத்தில், முதலிடம் தனுஷ்கா, மூன்றாமிடம் சவுதன்யா (ஜெய்வாபாய் பள்ளி), 2 வது இடம் விஷ்மிதா (ஏ.வி.பி., பள்ளி).
பதினான்கு வயது, 600 மீ., ஓட்டம், முதலிடம், ஆகேஷயா (15 வேலம்பாளையம் அரசு பள்ளி), இரண்டாமிடம் நவுநிகா (ஜெய்வாபாய் பள்ளி), மூன்றாமிடம் தனுஜா (ஏ.வி.பி., பள்ளி). உயரம் தாண்டுதலில் முதலிடம், இரண்டாமிடம் முறையே ஷாலினி, ஜெனிதா (ஜெய்வாபாய் பள்ளி, மூன்றாமிடம் சுருதிலயா (இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி).
பதினேழு வயது பிரிவு, 3000 மீ., ஓட்டம் முதலிடம் அனன்யா (அனுப்பர்பாளையம் அரசு பள்ளி), இரண்டாமிடம் சசிஹரினி (வீரசிவாஜி மெட்ரிக்), மூன்றாமிடம் ஸ்ரீ அபி (ஜெய்வாபாய் பள்ளி). உயரம் தாண்டுதல் முதலிடம் லாவண்யா ( அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி) இரண்டு மற்றும் மூன்றாமிடம் முறையே பிரியதர்ஷினி, ஜனார்த்தனி (ஜெய்வாபாய் பள்ளி).
ஈட்டி எறிதல் முதலிடம் தக் ஷனா (ஜெய்சாரதா பள்ளி), 2 வது இடம் ஹர்ஷினி (அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி), மூன்றாமிடம் பொன்ஹர்ஷினி (ஸ்ரீ சாய் மெட்ரிக்) நீளம் தாண்டுதல் முதலிடம் சாருஹர்சினி (ஜெய்வாபாய் பள்ளி), 2 வது இடம் அஷ்வினி (அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி), மூன்றாவது இடம் ரஞ்சனி பிரியா (வி.கே., அரசு பள்ளி,அய்யயங்காளிபாளையம்).
மாலையில் மழை பெய்ததால், மீதமுள்ள போட்டிகள், 9 மற்றும் 10 ம் தேதி நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.