/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நம்பிக்கை நாயகன் இறை அமுதன்; ஜெ.இ.இ., தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்; தன்னம்பிக்கை 'கால்' ஊன்றி சாதித்தார்
/
நம்பிக்கை நாயகன் இறை அமுதன்; ஜெ.இ.இ., தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்; தன்னம்பிக்கை 'கால்' ஊன்றி சாதித்தார்
நம்பிக்கை நாயகன் இறை அமுதன்; ஜெ.இ.இ., தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்; தன்னம்பிக்கை 'கால்' ஊன்றி சாதித்தார்
நம்பிக்கை நாயகன் இறை அமுதன்; ஜெ.இ.இ., தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்; தன்னம்பிக்கை 'கால்' ஊன்றி சாதித்தார்
ADDED : ஆக 06, 2024 11:23 PM

அவிநாசி அருகே கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்த மாற்றுத்திறனாளி மாணவர், ஜெ.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெற்று, பெருமை சேர்த்துள்ளார்.
ஐ.ஐ.டி.,யில் உயர்கல்வி வாய்ப்பு பெறுவது என்பது, பொதுவாகவே கடினமானது. ஜெ.இ.இ., என்ற கூட்டு நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஐ.ஐ.டி.,யில் இணைந்து படிக்க வாய்ப்பு கிடைக்கும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு, இது எட்டாக்கனி என்ற கருத்து, பரவலாக இருந்து வருகிறது.
ஆனால், இதை பொய்யாக்கி சாதாரண குடும்பத்தை சேர்ந்த அரசுப்பள்ளியில் மாணவர்களுக்கு கூட இது சாத்தியம் என்பதை நிரூபித்திருக்கின்றனர், கருவலுார் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள். இப்பள்ளியில், பிளஸ் 2 படித்த இறை அமுதன், ஜெ.இ.இ., மெயின் மற்றும் அட்வான்ஸ் தேர்வில் வெற்றி பெற்று, சென்னை ஐ.ஐ.டி.,யில் கெமிக்கல் இன்ஜினியரிங் படிப்பில் சேர்ந்துள்ளார்.
இவர், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அரசுப்பள்ளி மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இறை அமுதனை பாராட்டி, தமிழக முதல்வர் ஸ்டாலின், லேப்டாப் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். மாணவரின் தந்தை நடராஜன்; பனியன் கம்பெனி தொழிலாளி. தாய் சாந்தி. தங்கை நந்தினி, அதே பள்ளியில், ஏழாம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறிய வயதில் ஏற்பட்ட விபத்தில் எனது இடது கால் துண்டிக்கப்பட்டது. செயற்கை கால் உதவியுடன் நடமாடி வருகிறேன். என்னால் ஜெ.இ.இ., நுழைவு தேர்வை எதிர்கொள்ள முடியும் என ஆசிரியர்கள் னக்கு நல்ல முறையில் ஊக்கம் அளித்தனர்
கூட்டு முயற்சிக்கு பலன்!
பள்ளி தலைமையாசிரியர் மாரி கூறியதாவது:
மாணவ, மாணவியர் மத்தியில் ஜெ.இ.இ., போன்ற போட்டி தேர்வுகளில் ஆர்வமில்லாமல் இருந்தனர். ஆசிரியர்கள் தன்னம்பிக்கையை வளர்த்தனர்; போட்டி தேர்வுகளை எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை விதைத்தனர். 10 மாணவ, மாணவியரை நீட் தேர்வுக்கும், 10 மாணவ, மாணவியரை ஜெ.இ.இ,, தேர்வுக்கும் விண்ணப்பிக்க செய்தோம்.
எந்த மாதிரியான கேள்விகள் வரும் என்பதை, ஆசிரியர்கள் திரும்ப, திரும்ப பயிற்றுவித்து, மாணவ, மாணவியரை தயார்படுத்தினர்.
ஆசிரியர்களின் வழிகாட்டுதலை, மாணவர் இறை அமுதனும் சரியாக பின்பற்றி, தேர்வில் வெற்றியும் பெற்று விட்டார். மாணவனுக்குரிய தேர்வுக் கட்டணத்தை பள்ளி நிர்வாகமே ஏற்றது. மாநில அளவில் இவர் சாதனை புரிந்துள்ள நிலையில், அவரது முழு கல்வி செலவையும், 'நான் முதல்வன்' திட்டத்தில் அரசே ஏற்றுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.
- நமது நிருபர் -