/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரோட்டோர புதர்கள் அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்
/
ரோட்டோர புதர்கள் அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்
ரோட்டோர புதர்கள் அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்
ரோட்டோர புதர்கள் அகற்றும் பணி நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரம்
ADDED : செப் 07, 2024 03:03 AM

உடுமலை:நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டம் சார்பில், வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறாக உள்ள ரோட்டோர புதர்கள் அகற்றப்பட்டு வருகிறது.
உடுமலை நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கீழ் பராமரிக்கப்படும், பொள்ளாச்சி- தாராபுரம் (ஒரு பகுதி), பல்லடம் மாநில நெடுஞ்சாலை மற்றும் திருமூர்த்திமலை, சின்னாறு உள்ளிட்ட மாவட்ட முக்கிய ரோடுகளில் அதிக வாகன போக்குவரத்து உள்ளது.
இதில், திருமூர்த்திமலை, அமராவதி, சின்னாறு ரோடுகளில், சுற்றுலா வாகனங்கள் அதிகளவு செல்கின்றன. இந்நிலையில், கோடை கால மழைக்கு பிறகு, ரோட்டோரத்தில் புதர்கள் செழித்து வளர்ந்து, வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்பட்டு வந்தது.
மழைக்காலத்திலும் தண்ணீர் வடிவதற்கு இடையூறு செய்யும் வகையில், செடி, கொடிகள் அதிகளவு வளர்ந்து காணப்பட்டது.
வடகிழக்கு பருவமழை சீசன் துவங்கும் முன், பாலங்களை சீரமைத்தல், வடிகால்களை துார்வாருதல் உள்ளிட்ட பணிகள் நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டது.
தற்போது, ரோட்டோர புதர்கள் அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று திருமூர்த்திமலை ரோட்டில், கட்டர் இயந்திரத்தை பயன்படுத்தி, ரோட்டோர புதர்கள் அகற்றப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் லோகேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள், பணிகளை ஆய்வு செய்தனர்.