/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தவக்கால புனித நாட்கள் துவக்கம்; புனித வியாழன் அனுசரிப்பு
/
தவக்கால புனித நாட்கள் துவக்கம்; புனித வியாழன் அனுசரிப்பு
தவக்கால புனித நாட்கள் துவக்கம்; புனித வியாழன் அனுசரிப்பு
தவக்கால புனித நாட்கள் துவக்கம்; புனித வியாழன் அனுசரிப்பு
ADDED : மார் 29, 2024 12:55 AM

திருப்பூர்;கிறிஸ்தவர்கள் வணங்கும் ஏசு கிறிஸ்து, சிலுவையில் அறையுண்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நிகழ்வை, ஈஸ்டர் பெருநாளாக கொண்டாடுகின்றனர். கடந்த, மாதம், 14ம் தேதி சாம்பல் புதன் நிகழ்வுடன், தவக்காலம் துவங்கியது. தினமும் மாலை தேவாலயங்களில், சிறப்பு ஆராதனை, வழிபாடு நடத்தப்பட்டது. வெள்ளி தோறும், சிலுவைப்பாதை ஆராதனை நடத்தப்பட்டது. பல தேவாலயங்களில் சிறப்பு மறையுரை நடத்தப்பட்டது. கடந்த, 24ம் தேதி குருத்து ஞாயிறு வழிபாடு நடத்தப்பட்டது.நேற்று, புனித வியாழன் அனுசரிக்கப்பட்டது; ஏசு, தாம் சிலுவையில் அறையப்படுவதற்கு முன், தம், பன்னிரு சீடர்களின் பாதங்களை கழுவுவார். அதை நினைவு கூறும் வகையில் நேற்று மாலை, தேவாலயங்களில் நடந்த திருப்பலியில், தேவாலய குருக்கள், 12 பேரின் பாதங்களை கழுவும் சடங்கு நடந்தது.இன்று, ஏசு, சிலுவையில் இறந்ததை நினைவு கூறும் வகையில், புனித வெள்ளி நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது. நாளை, நள்ளிரவு, 12:00 மணிக்கு ஏசு சிலுவை சாவில் இருந்து உயிர்த்தெழுந்ததை நினைவு கூறும் ஈஸ்டர் பெருநாள் சிறப்பு திருப்பலி நடத்தப்படுகிறது.
அவிநாசி புனித தோமையார் தேவாலயப் பங்கு குரு கென்னடி கூறுகையில், ''ஏசு, குருத்துவத்தின் மேன்மையை இவ்வுலகிற்கு வெளிப்படுத்திய நாள் தான், புனித வியாழன். அன்பு, அமைதி, சகிப்புத்தன்மை, மன்னிப்பு ஆகியவற்றை மேன் மேலும் உறுதிப்படுத்தும் வகையில், தவக்கால நாட்கள் அனுசரிக்கப்பட்டன'' என்றார்.

