/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய கோ-கோ போட்டி மாணவ, மாணவியர் அபாரம்
/
குறுமைய கோ-கோ போட்டி மாணவ, மாணவியர் அபாரம்
ADDED : ஆக 13, 2024 11:24 PM

திருப்பூர்;திருப்பூரில் நடந்த குறுமைய விளையாட்டுப் போட்டியில் மாணவ, மாணவியர் தங்களின் திறமையை வெளிக்காட்டினர்.
அவிநாசி குறுமைய அளவிலான ஹாக்கி மற்றும் பால் பேட்மின்டன் போட்டி, அவிநாசி பழங்கரை, எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளியில் நடந்தது. தெற்கு குறுமைய அளவில் மாணவியருக்கான கோ கோ, டேபிள் டென்னிஸ் போட்டி, தி பிரன்ட்லைன் அகாடமியில் நடந்தது.
வடக்கு குறுமைய மாணவர் பிரிவில், டென்னிகாய்ட் விளையாட்டுப் போட்டி, சிறுபூலுவப்பட்டி, ஜெய் சாரதா மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பல்லடம் குறுமைய மாணவியருக்கான வாலிபால், டென்னிகாய்ட் போட்டி, பூமலுார், அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடந்தது. காங்கயம் குறுமைய இருபாலருக்கான கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ் மற்றும் மாணவியருக்கான கபடி போட்டி, காங்கயம் நத்தாக்கடையூர் பில்டர்ஸ் இன்ஜி., கல்லுாரியில் நடந்தது. போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் தங்களின் திறமையை வெளிக்காட்டினர்.