/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'குடி'மகன்கள் புகலிடமான புதிய பஸ் ஸ்டாண்ட்
/
'குடி'மகன்கள் புகலிடமான புதிய பஸ் ஸ்டாண்ட்
ADDED : மார் 25, 2024 12:32 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சிக்குச் சொந்தமான புது பஸ் ஸ்டாண்ட் வளாகம், பி.என்., ரோட்டில் அமைந்துள்ளது. இந்த வளாகம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் புனரமைக்கப்பட்டுள்ளது.
இங்கு 30 கோடி ரூபாய் மதிப்பில் புதிய வணிக வளாகம், வாகன பார்க்கிங் வசதியுடன் கட்டி முடிக்கப்பட்டது. இதில் இரு தளங்களில் 44 கடைகள்; நான்கு சக்கர வாகனங்கள் 30 மற்றும் 800 இரு சக்கர வாகனங்கள் நிறுத்தும் பார்க்கிங் வளாகம் ஆகியன அமைந்துள்ளது.
இவ்வளாகத்தை கடந்த பிப்., மாதம் முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இங்குள்ள வணிக வளாகத்தை டெண்டர் விடும் நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளதால் இந்த வளாகம் தற்போது வீணாகி வருகிறது. மேலும் 'குடி'மகன்கள் புகலிடமாகவும் மாறி விட்டது.
வளாகத்தில் பெரும்பாலான இடங்களில் காலி மது பாட்டில்கள் வீசப்பட்டுக் கிடக்கிறது. இரவு, பகல் என எந்நேரமும், சிலர் இந்த வளாகத்தில் படுத்துக் கிடக்கின்றனர்.

