/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புதிய வேகத்தடைகளில் குறியீடு இல்லை; தடுமாறும் வாகனங்கள்
/
புதிய வேகத்தடைகளில் குறியீடு இல்லை; தடுமாறும் வாகனங்கள்
புதிய வேகத்தடைகளில் குறியீடு இல்லை; தடுமாறும் வாகனங்கள்
புதிய வேகத்தடைகளில் குறியீடு இல்லை; தடுமாறும் வாகனங்கள்
ADDED : ஆக 01, 2024 12:42 AM
உடுமலை : தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், புதிதாக அமைக்கப்பட்ட வேகத்தடைகளில் குறியீடுகள் இல்லாததால், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.
பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், உடுமலை உட்கோட்ட பராமரிப்பிலுள்ள பகுதியில், விபத்து மற்றும் நெரிசல் அதிகம் ஏற்படும் பகுதிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறையால் ஆய்வு செய்யப்பட்டது.
கொங்கல்நகரம் நால்ரோட்டில், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என சில மாதங்களுக்கு முன் மக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையடுத்து, நெடுஞ்சாலைத்துறை சார்பில், கொங்கல்நகரம் நால்ரோடு, அரசு உயர்நிலைப்பள்ளி, சோமவாரப்பட்டி நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட இடங்களில், நெடுஞ்சாலைத்துறை சார்பில் இரு நாட்களுக்கு முன், வேகத்தடைகள் அமைக்கப்பட்டது.
ஆனால், வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளது குறித்து எவ்வித தகவல் பலகையும் வைக்கப்படவில்லை; வெள்ளைக்கோடு, 'ரிப்ளக்டர்' உள்ளிட்ட குறியீடுகளும் இல்லை.
இதனால், இரவு நேரங்களில், வேகத்தடைகள் இருப்பது தெரியாமல், வாகன ஓட்டுநர்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் நிலைதடுமாறி கீழே விழுகின்றனர்.
எனவே, நெடுஞ்சாலைத்துறையினர் புதிதாக வேகத்தடை அமைக்கப்பட்ட இடங்களில், குறியீடுகளை அமைத்து விபத்துகளை தவிர்க்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.